Solution of 422 cases in People’s Court (Lok Adalat) of Perambalur District!

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், இதன் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ் தலைமையில் 7 அமர்வுகள் அமைக்கப்பட்டு மக்கள் நீதிமன்றம் குன்னம், வேப்பந்தட்டையிலும் நடைபெற்றது.

மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல மாவட்ட நீதிபதி தனசேகரன் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலெட்சுமி ஒரு அமாவாகவும். சார்பு நீதிபதி அண்ணாமலை, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜமகேஸ்வர் ஆகியோர் ஒரு அமர்வாகவும், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் சுப்புலெட்சுமி, சங்கீதா சேகர் மற்றும் குன்னம் குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா மற்றும் வேப்பந்தட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் பர்வதராஜ் ஆறுமுகம் ஆகியோர் தனி தனி அமர்வுகளாக அமைக்கப்பட்டு வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது.

இதில் நீண்ட நாட்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், மோட்டர் வாகன விபத்து காப்பீட்டு வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தபட்ட குடும்பநல வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள். குற்றவியல் காசோலை மோசடி வழக்குகள் உட்பட 1500-க்கும் மேற்பட்ட வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் 422-வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டு மோட்டார் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத்தொகையாக 85,40,000 உட்பட மொத்தம் 1,37,66,150-க்கான (ஒரு கோடியே முப்பத்து ஏழு இலட்சத்து அறுபத்தாராயிரத்து நூற்றைம்பது மட்டும்) உத்தரவு வழங்கப்பட்டது.

வழக்கறிஞர்கள், வழக்காடிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு-நீதிபதியுமான சந்திரசேகர் செய்திருந்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!