Somandampudur is about 7 km away at Perambalur for Rs 15 fare collect in share auto : Public shocked
தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள பேருந்து கட்டணம் வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நாளுக்கு நாள் டீசல் மற்றும் பெட்ரோல் விலை ஏற்றி வருவாதக கூறி அனைத்து வாகன இயக்குநர்களும் கட்டண உயர்வை ஏற்றி வரும் வேளையில் தற்போது ஷேர் ஆட்டோக்களும் கட்டணங்களை உயர்த்தி வருகின்றன.
பெரம்பலூரில் இருந்து 3. கி.மீ தூரத்தில் உள்ள கோனேரிப்பாளையத்திற்கு கட்டணமாக ரூ.5 வசூலிக்கபட்ட ஷேர் ஆட்டோக்களில் ரூ.10 பத்தும், பெரம்பலூரில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள எசனை கிராமத்திற்கு கட்டணமாக ரூ.5 வசூலிக்கபட்டது ரூ.10-ஆகம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், பெரம்பலூரில் இருந்து 7 கி.மீ தூரமே உள்ள சோமண்டாபுதூருக்கு ரூ. 15 கட்டணமாக வசூலிக்கப்டுகிறது. மேலும், சோமண்டாபுதூருக்கு குறிப்பிடக்கூடிய அளவிற்கு பேருந்து வசதி இல்லை.
மேலும், சுமார் 2.கிமீ தூரம் கடந்து வந்து பெரம்பலூர் – ஆத்தூர் முக்கிய சாலைக்கு வந்தால் மட்டுமே அவர்கள் விரும்பிய ஊர்களுக்கு பேருந்துகளில் பயணிக்க முடியும் என்பதாலும், குறைவான மக்களே பயணிக்கிறார்கள் என்பதை காரணம் காட்டி கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அதிகாரிகள் ஆட்டோ உரிமையாளர்களுடன் பேசி நியமான கட்டணத்தை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.