Sonia Gandhi’s birthday: Congress party in Perambalur helps the differently abled by providing groceries and vegetables!

பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தியின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரோவர் கல்வி நிறுவன வளாகத்தில், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஜான் அசோக் வரதராஜன் தலைமையில் நடந்தது.

மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பழனிச்சாமி, சட்டமன்ற தொகுதி தலைவர்கள் பார்த்திபன் ராஜா மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜீவ் காந்தி மற்றும் கலை இலக்கியப் பிரிவு தலைவர் தன்ராஜ் மற்றும் பாக்யராஜ் நல்லதம்பி இளைஞர் காங்கிரஸார் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் சுமார் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய பை வழங்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில், மாற்றுத்திறனாளி ஒருவர் காங்கிரஸ் கொண்டு வந்த (100 நாள் வேலை திட்டம்) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில், தங்களுக்கும் பணி வழங்க கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு ஜான் அசோக் வரதராஜன் முயற்சி செய்வதாக உறுதி அளித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!