Special Business Loan Fair for Micro, Small and Medium Enterprises: Perambalur Collector Venkatapriya!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1947ம் ஆண்டு துவங்கப்பெற்ற இக்கழகம், மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறவுவதற்கும், ஏற்கனவெ இயங்கி வரும் தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வெறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

திருச்சி கிளை அலுவலகத்தில் (முகவரி – எண்.33, பிராமினெட் சாலை, KRT கட்டிடம், 2வது தளம், கன்டொன்மெண்ட், திருச்சி – 620 001) குறு சிறு மற்றும் நடுத்தர (NEEDS) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 08.12.2021 அன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கடன்மேளா 15.12.2021 வரை நடைபெற உள்ளது.

இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசின் மானியங்கள் (25 சதவிகித மூலதன மானியம், 6 சதவிகித வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதியதொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியம் அதிகபட்சம் ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுக் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவிகித சலுகை அளிக்கப்படும். NEEDS திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரியவாய்பினை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில மானிய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் தகவலுக்கு திருச்சி தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தை
0431-2460498, 4030028 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!