Special camp for adding, deleting and editing names in the voter list: Perambalur Collector!

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2022 பணியின் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் 01.11.2021 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வாக்கு விபரத்தினை அறியும் பொருட்டு வரைவு வாக்காளர் பட்டியலானது வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலானது elections.tn.gov.in என்ற வலைதளத்திலும், பெரம்பலூர் மாவட்ட வலையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்திட ஏதுவாக இம்மாதம் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மேற்படி சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

01.01.2022 அன்று 18 வயதை நிறைவு செய்திடும் எவரும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கலாம். புதியதாக வாக்காளராக பதிவு செய்திட படிவம் – 6-ல் விண்ணப்பிக்க வேண்டும். இறந்தவர்கள், திருமணமாகி, நிரந்தரமாக வெளியூர் சென்றவர்கள் மற்றும் இரண்டு முறை பெயர் பதிவு உள்ளவர்கள் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய படிவம் – 7-ல் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய வேண்டுவோர் படிவம் -8-ல் விண்ணப்பிக்க வேண்டும். ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8யு-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட விண்ணப்ப படிவங்களை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று கொள்ளலாம் அல்லது சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் உரிய ஆவணங்களுடன் நேரில் அனுகி விண்ணப்பத்தை பெற்று உடன் தாக்கல் செய்து கொள்ளலாம். மேலும், வாக்காளர்கள் ww.nvsp.in என்ற இணையதள முகவரிலும் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அனைத்து வாக்காளர்களும் தங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து, விடுபட்டு இருப்பின் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளவும், தவறான பதிவுகள் இருப்பின் திருத்தம் செய்து கொள்ளவும், இளம் வாக்காளர்கள் தங்களது பெயரை புதியதாக பதிவு செய்து கொள்ளவும் இந்த வாய்பினை பயன்படுத்திக்கொண்டு தங்களை வாக்காளராக பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!