பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் திருச்சியை சேர்ந்த (தனியார்) காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையும் இணைந்து பொதுமக்களுக்கான இலவச இருதய நோய் சிகிச்சை முகாமினை நாளை சனிக்கிழமை நடத்துகிறது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியது அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குழந்தைகள், மற்றும் பெரியவர்களுக்கான இலவச இருதய நோய் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையிலிருந்து சிறப்பு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் சிறப்பு இருதய நோய் மருத்துவ குழுவினர் வருகை புரிய உள்ளனர்.
இம்முகாமில் இருதய நோய் பாதிப்புள்ள குழந்தைகள் நீண்ட நாட்களாக இரத்தக் கொதிப்பு மாத்திரை, சர்க்கரை மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் நெஞ்சுவலி, மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு படபடப்பு பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே இருதய நோய் சிகிச்சை பெற்றவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் புதிதாக எதுவும் சந்தேகம் இருப்பவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு சிறப்பு சிகிச்சை பெறலாம்.
இம்முகாமில் இரத்த அழுத்தப் பரிசோதனை , இரத்த சர்ககரை பரிசோதனை இ.சி.ஜி பரிசோதனை மற்றும் எக்கோ பரிசோதனை ஆகியவை இலவசமாக செய்யப்பட்டு,
தேவையான சிகிச்சையும், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையும் இலவசமாக செய்யப்படும். என பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.