Special Camps for Disabled Persons; Perambalur Collector Information
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா விடுத்துள்ள தகவல்:
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மருத்துவச் சான்று வழங்குதல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பம் செய்தல் மற்றும் அலிம்கோ மூலம் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்தல் ஆகிய பணிகள் வட்டார அளவில் நடைபெற உள்ளது.
இச்சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் வட்டத்தில் வரும் மார்ச் 12 அன்று பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள ஸ்ரீகௌதம புத்தர் காது கேளாதோர் சிறப்பு பள்ளியிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் மார்ச் 14 அன்று வேப்பந்தட்டை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், வேப்பூர் வட்டத்தில் மார்ச் 16 அன்று வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், ஆலத்தூர் வட்டத்தில் மார்ச்17.அன்று பாடாலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடக்கிறது.
அனைத்து இடங்களிலும் காலை 10.00 மணிமுதல் மதியம் 1.00 மணி வரை முகாம்கள் நடைபெறும். முகாமில் கலந்துகொள்ள வரும் மாற்றுத்திறனாளி நபர்கள் அவர்களுக்குறிய தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்) பாஸ்போர்ட் சைஸ் பேட்டோ 2 எடுத்து வரவேண்டும். இச்சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.