Special Lok Adalat at Perambalur; Happening from July 27th to August 3rd!
வழக்காடிகள் பயன்பெறும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் வருகின்ற 29.07.2024 முதல் 03.08.2024 வரையில் நடைபெற உள்ளதால், வழக்காடிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு / வட்ட சட்டப்பணிகள் குழுவையோ அல்லது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவி எண் 04328 296206 மற்றும் disaperambalur1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம், என சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.