Special marks for 12th class Commendation to Arumbavoor Swami Vivekananda School students
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2020-2021ஆம் கல்வி ஆண்டின் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அட்சயா, சி.லோகேஷ்வரன், க.சதிஷ் ஆகியோர் சிறப்பான மதிப்பெண்கள் பிடித்து சாதனை படைத்தனர். மதிப்பெண்கள் 550-க்கு மேல் 9 பேரும், 500-க்கு மேல் 47 பேரும், 450-க்கு மேல் 62 பேரும், 400-க்கு மேல் 69 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில், கல்வி நிறுவனத்தின் தாளாளர் மு.இராஜேந்திரன் தலைமையில் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார். செயலாளர் இரா.ராதா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் இரா.ராஜாமணிகண்டன் மாணவர்கள் எதிர்காலத்தில் தொடர்ந்து பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று வாழ்த்தினார். விழாவில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.