Special Police Team have nabbed a notorious robber involved in a series of robberies at various places including a bank in Perambalur district.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை போலீசார் மடக்கி பிடித்து 2 மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களில் வேப்பந்தட்டையில் வங்கி, துணிக்கடை, சூப்பர் மார்க்கட், மற்றும் பிற கடைகள், மங்கலமேட்டில் உள்ள தனியர் மோடடர்சைக்களில் ஷோரும், கிருஷ்ணாபுரம் மளிகைகடை மற்றும் டைல்ஸ் கடையில் திருட்டு முயற்சியும், பெரம்பலூர் பாலக்கரை ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் திருட்டும் அன்னமங்கலம் 5 வீட்டுகளில் திருட்டு முயற்சி நடந்ததில் ஒருவீட்டில் திருட்டும், போனது. சிறுகுடல் பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில்திருட்டு, பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள ராஷினிநகர் 3 சவரன் தாலிஜெயின் பறிப்பு, அரும்பாவூர் வீட்டில் திருட்டு,15 சவரன் 2 லட்சம் ரொக்கம் திருட்டு ரஞ்சன்குடி கிராமத்தில் தனியாக இருந்த 2 வீட்டில் கொள்ளை என 12 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்ட போலீசார் கைரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் எஸ்.பி நிஷாபார்த்திபன் உத்தரவின் பேரில், டி.எஸ்.வி சரவணன் தலைமையில் தனிப்பபடை அமைக்கப்பட்டது. அதில் எஸ்.ஐ மனோஜ், மற்றும் காவலர்கள் அலெக்ஸ், லட்சுமணன் ஆறுமுகம் ஆகியோர் கொண்ட தனிப்படை கடந்த 10 நாட்களாக தொடர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட ஊர்களில் உள்ள கொள்ளையர்களையும் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு அரும்பாவூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வாகன பதிவெண் இல்லாமல் வந்த இளைஞன் போலீசாரை தப்பி ஓட முயற்சித்த போது போலீசார் அவனை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியதில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, ஜெயிலில் இருந்து வெளிவந்த வேலூர் மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்த ரவி மகன் விஜய் (22). என்பதும் தெரியவந்தது. பின்னர், போலீசார் நடத்தி விசாரணையில், வங்கி உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் கைரேகை ஒப்பீடு பார்த்த போது விஜயின் கைரேகை ஒத்து போனது, மேலும், அவரிடம் இருந்து ஷோரூமில் எடுத்த சென்ற 2 புதிய மோட்டர்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர். இது குறித்து மேலும், தீவிர விசாரணை நடத்தி அரும்பாவூர் போலீசில் ஒப்படைத்துள்ளனர். மேலும் கொள்ளையடனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கொள்ளையன் விஜய் அருகில் உள்ள சேலம் மாவட்டத்தில் வீரகனூர், கெங்கவல்லி, ஆத்தூர் பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதே போல் இன்று நள்ளிரவு பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள எலக்டிரிக்கல் மற்றும் டீ கடையில் திருடிச் சென்ற கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை வைத்து அடையளம் கண்ட போலீசார் கல்பாடி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி (வயது 50) என்பவனை செங்குணம் கைகாட்டி அருகே மடக்கி பிடித்து, கொள்ளையடித்த பணத்தையும், பறிமுதல் செய்தனர். பின்னர், அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்ட போலீசாரின் நடவடிக்கை அச்சத்தில் ஆழ்ந்திருந்த பொதுமக்களுக்கு சற்று ஆறுதலையும் நிம்மதியையும் தந்துள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!