Special Redressal Camp for the Soldiers: Perambalur District Collector V.Santha Information.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் வரும் டிச.20 (வியாழக் கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது கோரிக்கையினை மனுவாக அன்றைய தினம் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனுவின் இருபிரதிகளை அடையாள அட்டை நகலுடன் அளித்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.