Special summer Sidhha Medical camp at Perambalur; Launched by the Collector!
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாபெரும் இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாமினை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்து பேசியதாவது:
நமது முன்னோர்கள் சிறுதானிய உணவுகள் பல வகைகள் போன்ற நம் மண்நிற்கேற்ப்ப உணவு வகைகளை உட்கொண்டதன் காரணமாக நீண்ட நாட்கள் நோயின்றி வாழ்ந்து வந்தனர் . மண்பானையில் நீர் அருந்துவது நீர் ஆகாரம் அதிகமாக எடுத்துக் கொள்வது , சிறுதானிய உணவு போன்ற பல்வேறு உணவு பழக்கங்களை கையாண்டு கோடை காலங்களை நமது முன்னோர்கள் மிக சிறப்பாக கையாண்டனர் . நம் முன்னோர்கள் கையாண்ட வழிமுறைகளை நாம் பின்பற்றி கோடை காலங்களை எந்த விதமான உடல் பாதிப்பும் இன்றி சுலபமாக கடந்து செல்லலாம் என பேசினார். பொது மக்களுக்கு இலவச மூலிகை கன்றுகளும், கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தினை வழங்கினார்.
முகாமில், சித்த மருத்துவம் ,ஹோமியோபதி மருத்துவம் மற்றும் இயற்கை யோகா மருத்துவத்தின் சார்பாக கோடைகால உணவுகள் கோடைகால நோய்களை தீர்க்கக் கூடிய மருந்துகள் மற்றும் நமது அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக்கூடிய இயற்கை பொருட்களின் நன்மைகள் குறித்தும் அதை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டது.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், மருத்துவமனை கண்காணிப்பாளர் அர்ஜுனன், இருக்கை மருத்துவ அலுவலர் சரவணன், சித்த மருத்துவர்கள் விஜயன் , செந்தமிழ்ச்செல்வி கற்பகம் , கலைச்செல்வி, ஹோமியோபதி மருத்துவர் மருத்துவர் ராகுல்ஜி , இயற்கை யோகா மருத்துவர் கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.