Special trainings for job seekers on behalf of Perambalur IOB Bank, 2022-23; Call to take advantage!

பெரம்பலூரில் உள்ள ஐஒபி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது:

வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கவும் சுயவேலை வாய்ப்பை அதிகரிக்கவும் மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் எனும் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில்,முன்னோடி வங்கியான இந்தியன் ஒவர்சீஸ் வங்கி தனது சிநேகா அறக்கட்டளையின் மூலம் ஐஒபி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகளை நடத்தி வருகிறது.

இந்த பயிற்சி மையத்தில், தொழிற் பயிற்சிகள் இலவசமாகவும், குறுகிய கால தீவிரமான பயிற்சி வகுப்புகளாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. பயிற்சி வகுப்புகள் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை முழுநேர வகுப்புகளாக நடத்தப்படுகிறது. பயிற்சியின் போது காலை மற்றும் மதிய உணவு தேனீருடன் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இலவசமாக தரப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பொருளாதார உதவி பெற சிறப்பான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

பயிற்சிகளில் சேர்வதற்கு,வயது 18க்கு மேல் மற்றும் 45க்கு குறைவாகவும் , எழுத படிக்க தெரிந்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

பெரம்பலூரில் உள்ள ஐஒபி(IOB) ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் 2022 -2023ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்டுள்ள பயிற்சிகள் விவரம்:

தையற்கலை (Tailoring), ஆண்/பெண் 30 நாட்கள், எம்பிராய்டரி & ஃபேப்ரிக் ஓவியம் (Embroidery & Fabric Painting) ஆண்/பெண் 30 நாட்கள், அழகு கலை பயிற்சி(Beauty Parlour Management) பெண்கள் மட்டும் 30 நாட்கள்,

அப்பளம்,ஊறுகாய் மற்றும் மசாலா பொடி தயாரிப்பு (papad, pickle and masala powder making) ஆண்/பெண் 10 நாட்கள், ஃபாஸ்ட் ஃபுட் தயாரிப்பு (Fast Food making) ஆண்/பெண் 10 நாட்கள்,

அகர்பத்தி தயாரிப்பு (Homemade Agarbatti Maker ) ஆண்/பெண் 10 நாட்கள், காஸ்ட்யூம் ஜூவல்லரி தயாரிப்பு (Costume Jewelry Making) பெண்கள் மட்டும் 13நாட்கள், பொம்மை தயாரித்தல் பயிற்சி (Soft Toys Maker and Seller) ஆண்/பெண் 13நாட்கள், சணல் பை தயாரிப்பு(Jute Products Udyami) ஆண்/பெண் 13நாட்கள்

காகித பை தயாரிப்பு(Paper Cover Making) ஆண்/பெண் 10 நாட்கள், வீட்டு உபயோக சாதனங்கள் பழுது நீக்கல் பயிற்சி (Domestic Electrical Appliance Service ) ஆண்/பெண் 30 நாட்கள், விவசாய தொழில் முனைவோர் பயிற்சி(Krishi Udyami) ஆண்/பெண் 13 நாட்கள், காளான் சாகுபடி(Mushroom Cultivation) ஆண்/பெண் 10 நாட்கள்,

கறவை மாடு பராமரிப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்(Dairy Farming and vermi compost making) ஆண்/பெண் 10 நாட்கள், ஆடு வளர்ப்பு(Goat rearing) ஆண்/பெண் 10 நாட்கள், கோழி வளர்ப்பு ஆண்/பெண் 10 நாட்கள், தேனீ வளர்ப்பு ஆண்/பெண் 10 நாட்கள், மலர் சாகுபடி ஆண்/பெண் 10 நாட்கள்,

செல் போன் பழுது நீக்கல் மற்றும் சேவை ஆண்/பெண் 30 நாட்கள், சிசி டிவி பொருத்துதல் மற்றும் சேவை, அலாரம், புகை அணைப்பான் ஆண்கள் மட்டும் 13 நாட்கள்,

மெழுகுவர்த்தி தயாரிப்பு ஆண்/பெண் 10 நாட்கள், கட்டிடம் வண்ணப்பூச்சு ( Building Painting ) ஆண் 10 நாட்கள், கட்டிட மேஸ்திரி மற்றும் கான்கீரிட் வேலை (Masonry & Concrete Works) ஆண்கள் மட்டும் 30 நாட்கள்,

மேற்கண்ட திறன் வளர்ப்பு பயிற்சிகளில் சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் தங்களுடைய பெயர், முகவரி மற்றும் அலைப்பேசி எண்ணை ஐஒபி (IOB) ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் நேரடியாக வந்து பதிவு செய்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!