Special village council meeting in Perambalur district: Collector Venkatabriya information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 2023-2024-ஆம் ஆண்டிற்கான பணிகளை தேர்வு செய்தல் மற்றும் தொழிலாளர் மதிப்பீட்டு அறிக்கை (Labour Budget) தயார் செய்தல் குறித்து கால அட்டவணை நிர்ணயம் செய்து ஒப்புதல் பெற தெரிவிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து, 09.12.2022 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்)-ஆல் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!