Spinning in Veppandattai: DMK candidate Prabhakaran’s campaign promise!

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.பிரபாகரன் இள்று தனது கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, நெய்க்குப்பை, என்.புதூர், சாத்தனவாடி, மேட்டுப்பாளையம், அழகாபுரி, சிறுவயலூர், அனுக்கூர், அ.குடிக்காடு, சாலை, பிரம்மதேசம், வல்லாபுரம், வாலிகண்டபுரம், தம்யை தேவையூர், காந்திநகர், ரஞ்சன்குடி, மங்களமேடு, சின்னாறு, எஸ்.எல்.ஆர். காலனி, எறையூர் பகுதிகளில் இன்று காலை முதலே தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். வீதி, வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்த அவர், திமுகவின் தேர்தல் அறிக்கைகள், திமுக முந்தைய ஆட்சி காலத்தின் சாதனைகளை எடுத்துரைத்தார். வேப்பந்தட்டையில் நூற்பாலையும், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பொருட்கள் தொடர்பான ஆலைகள் தொடங்கவும் செய்வேன் என வாக்குறுதி அளித்தார். முன்னதாக பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தி அனுப்பினர். மகளிர் அணியினர் மகாதேவிஜெயபால் தலைமையில் வீடுவீடாக திமுகவின் தேர்தல் அறிக்கை பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

இந்த பிரச்சாரத்தில், மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா. துரைசாமி, மாநில மருத்துவரணி துனைச் செயலாளர் டாக்டர் செ. வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ம .இராஜ்குமார், பொறியாளர் ப.பரமேஷ்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ இரவிச்சந்திரன், க.ராமலிங்கம், துணைப்பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!