Sponsoring Village Artists and Artist troops to buy musical instruments, clothing and accessories:Perambalur Collector V. Santha Information

பெரம்பலூர் கலெக்டர் சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:

தொன்மை சிறப்புமிக்க தமிழக கிராமியக் கலைகளை போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக்குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ.5 ஆயிரம் – வீதம் 500 கலைஞர்களுக்கும், கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் ரூ. 10,000 வீதம் 100 கலைக் குழுக்களுக்கும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கு தனிப்பட்ட கலைஞரின் வயது 31.03.2020 தேதியில் 16 ஆண்டுகள் நிரம்பியதாகவும், 30 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். கலைக்குழுக்கள் தங்களது கலை நிறுவனத்தைப் பதிவு செய்திருத்தல் வேண்டும். விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் இலவசமாக வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.07.2020 க்குள் அல்லது அதற்கு முன்னரே உறுப்பினர் – செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை – 600 028. (தெலைபேசி எண் – 044 – 2493 7471) என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!