Sport Tournament for the Chief Minister’s Cup in Namakkal!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
நாமக்கல் மாவட்டத்தில், 2018-19ம் ஆண்டில் முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம், நீச்சல், ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, வாலிபால், பளு தூக்குதல், பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் உள்ளிட் விளையாட்டு போட்டிகள் நாளை 29ம் தேதி செவ்வாய்க்கிழமை துவங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
இப்போட்டியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக 100 மீ, 800 மீ, 5,000 மீ ஓட்டப்பந்தயம், 100 மீ. தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
பெண்களுக்கு கபாடி போட்டியும் நடைபெறும். மேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே ஜிம்னாஸ்டிக், பளு தூக்குதல், கூடைப்பந்து, வாலிபால், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகள் வருகிற 30ம் தேதி பாவை இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெறும்.
இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போட்டி நடைபெறும் நாளில் காலை 8 மணிக்குள் தங்களின் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.