Sports Competition for Chief Minister’s Cup: Perambalur Collector V.Santha Info!

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், தடகளம், நீச்சல், ஜுடோ, குத்துச்சண்டை, இறகுப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, கபாடி, டென்னிஸ், கையுந்துப்பந்து, ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இருபாலாருக்கும் வரும் பிப்.18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் அரசு விளையாட்டு வளாகத்தில் காலை 8.30 மணியளவில் நடைபெற உள்ளது.

பிப்.18 அன்று நடைபெறும் போட்டிகள் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கபாடி, வாலிபால், ஹாக்கி, ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இருபாலாருக்கும் நடைபெற உள்ளது. 19.02.2020 அன்று நடைபெறும் போட்டிகள் நீச்சல், ஜுடோ, குத்துச்சண்டை, டென்னிஸ், ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இருபாலாருக்கும் நடைபெற உள்ளது.

ஆண்களுக்கான தடகள போட்டிகளில் 100 மீ, 200மீ, 400 மீ, 1,500மீ, 10,000 மீ ஓட்டப்போட்டிகள், 400 மீ தடை தாண்டுதல், கோல்ஊன்றி தாண்டுதல், நீளம் தாண்டுதல், சங்கிலிகுண்டு எறிதல், மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறும்.

பெண்களுக்கான தடகள போட்டிகளில100 மீ, 200மீ, 800 மீ, 1,500 மீ, 5,000 மீ, ஓட்டப்போட்டிகள், 400 மீ தடை தாண்டுதல், கோல்ஊன்றி தாண்டுதல், நீளம் தாண்டுதல், சங்கிலிகுண்டு எறிதல், மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறும்.

ஆண்களுக்கான நீச்சல் போட்டிகளில் 100 மீ பேக் ஸ்ட்ரோக், 100 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக், 100 மீ பட்டா;பிளை, 200 மீ பட்டா;பிளை, 200 மீ பேக் ஸ்ட்ரோக், 200 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக், 400 மீ இன்டிவிஜுவல் மிட்லே மற்றும் 1500 மீ ப்hP ஸ்டைல். பெண்களுக்கான நீச்சல் போட்டிகளில் 100 மீ பேக் ஸ்ட்ரோக், 100 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக், 100 மீ பட்டா;பிளை, 200 மீ பட்டா;பிளை, 200 மீ பேக் ஸ்ட்ரோக், 200 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக், 400 மீ இன்டிவிஜுவல் மிட்லே மற்றும் 800 மீ பிரி ஸ்டைல்.

இதில் கலந்து கொள்பவர்கள் 31.12.2019 அன்று 25 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். (01.01.1995 அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். இதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.) மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பெற்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் அணிவீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு தலா ரூ.1- இலட்சம், ரூ.75,000- ரூ.50,000- மும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் பரிசு ரூ.1000- இரண்டாம் பரிசு ரூ.750- மூன்றாம் பரிசு ரூ.500- வழங்கப்படும். வங்கிக் கணக்குப்புத்தகம் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது 5 வருடங்களாவது வசித்து வருவதற்கான புகைப்படத்துடன் கூடிய சான்றினை (குடும்ப அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பள்ளி மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் ) இவைகளில் ஏதேனும் ஒன்றை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் போட்டியில் கலந்து கொள்ளும் முன் ஒப்படைக்க வேண்டும்.

போட்டிகளில் கலந்து கொள்ள வரும் வீரர் – வீராங்கணைகள் கட்டாயம் சான்றிதழ்களுடன் வரவும். (சான்றிதழ்கள் சமர்பிக்கப்படாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதியில்லை.) எனவே மாவட்ட அளவிலான போட்டிகளில் அதிக அளவில் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ளலாம். மேலும் இதுகுறித்து விவரங்களுக்கு 9360870295, 8525988224 என்ற அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம், என தொpவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!