Sports competitions on behalf of the Dr. Muthulaxmi Reddy maglir Narpani mandram in Perambalur.
பெரம்பலூரில், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகளிர் நற்பணி மன்றம் சார்பில் இன்று மகளிருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
பெரம்பலூரில் உள்ள டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகளிர் நற்பணி மன்றம் சார்பில், இன்று சிறுமிகள், மற்றும் மகளிருக்கான விளையாட்டு போட்டிகள் முத்துக்கிருஷ்ணா மக்கள் மன்றத்தில் நடத்தப்பட்டன.
அச்சங்கத்தின் தலைவர் மல்லிகாஜெயராமன், செயலாளர் சித்ரா புகழேந்தி, பொருளாளர் தீபாஅரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை நடத்தினர். அதில் பூ கோலமிடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின், பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு வரும் ஆக 7ம் தேதி அன்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் நினைவு தின நிறைவு விழாவில் சிறுமிகள் மற்றும், மகளிருக்கான பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ரெட்டி சங்க மாவட்ட செயலாளரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான என்.ஜெயராமன், ரெட்டி நல இளைஞரணி செயலாளர் 007 ஸ்டுடியோ மற்றும் டிரீம் கவுஸ் புரோமோட்டர் உரிமையாளர் மு.இமயவரம்பன், உணவு , தேனீர் விடுதி உரிமையாளர் சங்க மாவட்ட செயலாளர் கீதா ஹோட்டல் உரிமையாளர் சிவக்குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், சிறுவர், சிறுமிகள், உட்பட மகளிர் பலர் கலந்து கொண்டனர்.
Sports competitions on behalf of the Dr. Muthulaxmi Reddy maglir Narpani mandram in Perambalur.