Sri Ranganathar temple soragavasal opening in Namakkal: Thousands of devotees of Swami darshan
நாமக்கல்லில் இன்று ரங்கநாதர் கோவில் சொர்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்லின் மையத்தில் அமைந்துள்ள ஒரே கல்லினால் உருவான சாலக்கிராம மலையில் கிழக்கு பகுதியில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் மலையைக்குடைந்து குடவறைக் கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் கார்க்கோடகன் என்னும் பாம்பின் மீது அனந்த சயன நிலையில் ஸ்ரீ ரங்கநாதர் பக்த்களுக்கு காட்சியளிக்கிறார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று இக்கோவிலில் சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறப்புவிழா நடைபெற்றது. அதிகாலை 4.00 மணிக்கு கோவிலில் சொர்க்க வாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் சொர்க்கவாசல் கதவுகளை திறந்து வைத்தனர்.
முதலில் சுவாமியின் ஜடாரி சொர்க்கவாசல் வழியாக எடுத்துவரப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ரங்கா, ரங்கா என்று கோஷம் எழுப்பியவாறு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் இதில் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளசு, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார்,இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இரவு 10 மணிவரை சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று சொர்க்கவாசல் வழியகாச் சென்று ரங்கநாதாரை வழிபட்டனர்.
விழாவை முன்னிட்டு உபயதாரர்கள் மூலம் 54 ஆயிரம் லட்டுகள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பக்தர்களின் கியூ நாமக்கல் பூங்கா ரோடு வரை நீண்டதால், நாமக்கல் நகரில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டன.