sri-ramakrishna-metric-school golden-gatesபெரம்பலூர் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 2 ஆம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் 3 பேரும், வென்றனர். ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி மாணவி ஒருவரும், கோல்டன் கேட்ஸ் பள்ளி மாணவர்கள் இருவரும் என 3 பேர் பிடித்தனர்

10ம்வகுப்பு தேர்வில் மாநில அளவில் 2 இடம் பெற்றவர்கள் :

பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி :


டி. ஹேமலதா
.மதிப்பெண்கள் 498 : பாட வாரியாக மதிப்பெண்கள் ; தமிழ்-98, ஆங்கிலம்-100, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,பெரம்பலூர், பெற்றோர்: தந்தை தங்கபாண்டியன். தோட்டக்கலைத்துறையில் தட்டச்சர் பணி,பெரம்பலூர். தாய் – கஸ்தூரி இல்லத்தரசி. மாநிலத்தில் 2வது இடம், மாவட்டத்தில் முதல் இடம். பள்ளியில் அதிகளவிலான தேர்வுகளை எழுதியது, பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனையே வெற்றிக்கு காரணம் என்றும் டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்வேன் எனவும் தெரிவித்தார்.

பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ;

இ.சவுந்தர்யா, மதிப்பெண்கள் 498 : பாட வாரியாக மதிப்பெண்கள் : தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,பெரம்பலூர் பெற்றோர் : தந்தை இளங்கோவன், உதவி இயக்குநர், வேளாண்மை துறை வேப்பூர், தாய் – சித்ரா இல்லத்தரசி. மாநிலத்தில் 2 வது இடத்தையும் மாவட்டத்தில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆலோசனை வழங்கியதுதான் வெற்றி பெற காரணமாக இருந்தது என்றும், மருத்துவராகி கிராமப்புற ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.செல்வகணேஷ்,
மார்க்: 498, பாட வாரியாக மதிப்பெண்கள் : தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,பெரம்பலூர், பெற்றோர்: தந்தை ரமேஷ், ரியல்எஸ்டேட், தாய் – சிவதர்ஷினி இல்லத்தரசி. மாநிலத்தில் 2 வது இடம், மாவட்டத்தில் முதலாவது வது இடம். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆலோசனை. டாக்டராகி பின்னர் ஐஏஎஸ் படித்து கலெக்டர் ஆகி மக்களுக்கு சேவை செய்வேன் எனவும் தெரித்தார்.

10ம்வகுப்பு தேர்வில் மாநில அளவில் 3 இடம் பெற்றவர்கள்

டி. எழில்மதி, மார்க்: 497, பாட வாரியாக மார்க்: தமிழ்-99, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமாந்துறை. பெற்றோர்: தந்தை ஆறுமுகம். கம்ப்யூட்டர் ஜோதிடர், தொழுதூர். தாய் – வள்ளியம்மை இல்லத்தரசி. மாநிலத்தில் 3வது இடம், மாவட்டத்தில் 2வது இடம். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனை. டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்தல்

எஸ். மிர்ணாளினி, மார்க்: 497, பாட வாரியாக மார்க்: தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100.செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எளம்பலுõர். பெற்றோர்: தந்தை செந்தில்குமார், விவசாயி, தாய் – கலைவாணி. தனியார் பள்ளி ஆசிரியர். மாநிலத்தில் 3 வது இடம், மாவட்டத்தில் 2வது இடம். பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆலோசனை. டாக்டராகி கிராமப்புற ஏழை மக்களுக்கு சேவை செய்தல்

கே.லிஷா , மார்க்: 497, பாட வாரியாக மார்க்: தமிழ்-99, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. தந்தை ரோவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,பெரம்பலுõர், பெற்றோர்: தந்தை கிருஷ்ணசாமி, சிங்கப்பூரில் பணி, தாய் – மகேஸ்வரி இல்லத்தரசி. மாநிலத்தில் 3 வது இடம், மாவட்டத்தில் 2 வது இடம்.முழுமன திருப்தியோடு படித்தேன். டாக்டராகி பின்னர் ஐஏஎஸ் படித்து கலெக்டர் ஆகுதல்.

என். ரஷிமிபிரியா
. மார்க்: 497, பாட வாரியாக மார்க்: தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. தந்தை ரோவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,பெரம்பலூர், பெற்றோர்: தந்தை நெப்போலியன், முதல்வர், ரோவர் பார்மஸி காலேஜ்,பெரம்பலுõர். தாய் – பூங்கோதை. பள்ளி ஆசிரியர். மாநிலத்தில் 3 வது இடம், மாவட்டத்தில் 2 வது இடம்.

ஆசிரியர், பெற்றோர் ஆலோசனை, டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்வேன் எனவும் தெரிவித்தார்.

மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, அந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம், செயலர் எம்.எஸ். விவேகானந்தன் ஆகியோர் பாராட்டி இனிப்பு வழங்கினர். கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ஆர். ரவிச்சந்திரன் மற்றும் பள்ளி முதல்வர்கள் பாராட்டி இனிப்பு வழங்கினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!