Start a free legal aid clinic in Namakkal young juvenile court

நாமக்கல் இளம் சிறார் கோர்டில் சட்ட உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட இளம் சிறார்களுக்கு சட்டத்திற்கு முரண்படுகின்ற குழந்தைகளுக்காக நாமக்கல் இளைஞர் நீதிக்குழுமம், மோகனூர் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுரையின் பேரில் நீண்ட கால நிலுவையில் உள்ள இளஞ்சிறார் வழக்குகளை விரைந்து முடித்து இளைஞர்கள் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற அடிப்படையில் இளைஞர் நீதிக்குழும வளாகத்தில் இலவச சட்ட உதவி மையம் துவங்கப்பட்டது.

சட்ட உதவி மையம் துவக்க விழாவிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி கோகுல கிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கிவைத்தார். நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அருளரசு, இளைஞர் நீதிக்குழும முதன்மை நடுவர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் தில்லை சிவக்குமார் வரவேற்றார். உறுப்பினர் பாரதி, குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதபிரியா, நன்னடத்தை அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொகண்டனர்.

இனிவரும் காலங்களில் இலவச சட்ட உதவிமையம் இளம் சிறார் நீதிக்குழும வளாகத்தில் செயல்படும். இதன்மூலம் இளம்சிறார் வழக்குகள் மற்றும் ஜாமீன் பெறுவதுற்கு தேவையான ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும். இதனை சம்மந்தப்பட்ட இளைஞர்களும் பெற்றோர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சார்பு நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!