Started At Specialty Xmas Cake Sales, Aswins Home Special! Founder Ganesan Information
அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்காக ரிச் பிளம்கேக், சாக்லேட் கேக், மற்றும் மஃபின் கேக் போன்ற பல்வேறு வகையான கேக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.
இது குறித்து அஸ்வின்ஸ் குழும நிர்வாக இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலுாரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2003ம் ஆண்டு தொடங்கப்பட்ட அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் சார்பில் ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் அண்ட் பேக்கரி மற்றும் ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து திருச்சி, நாமக்கல், ஆத்தூர், கரூர், சென்னை, அரியலூர், புதுச்சேரி, மற்றும் துறையூர் என பல்வேறு ஊர்களில் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் நம் உடல் நலனை கருத்தில் கொண்டு, இந்து உப்பு பயன்படுத்தியே அனைத்து ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், கார வகைகள் மற்றும் உணவு பொருட்களும் தயாரித்து வழங்குகிறது. அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் வகையில் மினரல் வாட்டர், ஒரே ஒரு முறை மட்டுமே எண்ணெய் வகைகள் உபயோகப்படுத்தப்பட்டு பொருட்களை தரமாகவும் சுகாதாரமாகவும் தயாரித்து வழங்கி வருகிறது. தீபாவளி, ஆயுதபூஜை, விநாயகர், சதுர்த்தி, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ், புத்தாண்டு, மற்றும் பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் சிறப்பு பலகாரங்கள் மற்றும் அறுசுவை பதார்த்தங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர நவீன எந்திரங்களை கொண்டு மிருதுவாகவும், ருசியாகவும் பிறந்த நாள் கேக் முதல் பல வகையான கேக் வகைகள் என தயார் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இந்நிலையில் வரும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு புது வகையான மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் கேக் வகைகளுக்கு இணையான ரிச் பிளம்கேக், சாக்லேட் கேக், மஃபின் கேக்,பொக்கட் கேக், ஃபாண்டன்ட் கேக் மற்றும் ஃப்ரஷ் க்ரீம் கேக் போன்ற பல்வேறு வகையான கேக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. எனவே பொது மக்கள் அனைவரும் அஸ்வின்ஸ் கேக் வகைகளை வாங்கி உண்டு கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை சிறப்பாக கொண்டாட வேண்டுகிறோம்.