State level cricket tournament in Perambalur. International Businessman DATO S PRAKADEESH KUMAR opened the batting!
பெரம்பலூர் கோனேரிப்பாளையம் புறவழிச் சாலை அருகே ஏ-ஒன் தொலைக்காட்சி சார்பில் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ. பிரகதீஸ்குமார் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது. அதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அணிகள் கலந்து கொள்கின்றன. இதனை நேற்று காலை டத்தோ. பிரகதீஸ்குமார் பேட்டிங் செய்து தொடங்கி வைத்தார். அப்போது. கோகுலம் ஜீவல்ஸ் குணசீலன், பாலு டிரைவிங் ஸ்கூல் பாலு, உதயம் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சேகர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.