State Level Kho-Kho Competition at Perambalur; Happened at Almighty Vidyalaya Public School!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளயில் தமிழ்நாடு மாநில கோ-கோ கழகம் சார்பில், 10 மாவட்டங்கள் பங்கேற்ற மாநில அளவிலான கோ-கோ போட்டி நடந்தது.
இந்திய துணைக்கண்டத்தில் 2 பாரம்பரிய விளையாட்டுகளில் கோகோ விளையாட்டும் ஒன்று. மற்றொன்று கபடி. பெண்களுக்கான கோகோ விளையாட்டு களத்தில் 9 பேர்களையும் தொட்டு வியூகம் வகுத்து ஆட்டத்தில் வெளியேற்றுவதே எதிரணி ஆட்டக்காரர்களின் நோக்கமாகும். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் அங்கமாக இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் சார்பில் இந்திய விளையாட்டு ஆணையம் முன்னெடுப்பாக நாடு முழுவதும் 10 விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
அதில் நமது தமிழ்நாட்டில் கோ-கோ விளையாட்டு போட்டியானது தோ;வாகி இந்திய அரசின் இளைஞர் நலன் விளையாட்டு துறை, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய கோ-கோ கூட்டமைப்பு ஆணையம், மற்றும் தமிழ்நாடு மாநில கோ-கோ கழகம் சார்பாக பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி இணைந்து, மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 11 தேதி மாநில அளவிலான கோகோ விளையாட்டு போட்டி நடைபெற்றது.
பெண்களுக்கான நாக் அவுட் முறையில் திறந்த வெளி ஆட்டமாக நடைபெற்ற போட்டியில் ஈரோடு, சென்னை, சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி சேலம் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 150 வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்று மோதினர், இறுதி சுற்றில், சிவகங்கை, ஈரோடு, அணிகள் மோதின.
இந்த போட்டியை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் இடத்தில் சிவகங்கையும், 2 இடத்தில் ஈரோடு அணியும், திருப்பூர், கோவை ஆகிய அணிகள் மூன்றாவது இடத்திலும் வெற்றி வாகை சூடினர். வெற்றி பெற்றவர்களுக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மற்றும் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியின் தாளாளர் ராம்குமார் ஆகியோர் சான்றிதழும் வெற்றிக் கோப்பையும் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில கோகோ கழக செயலாளர் யு.நெல்சன் சாமுவேல், இணை செயலாளா;கள், எம்.அசோக், கருப்பையா, ராஜி, நடுவர்மன்ற குழு நாகராஜ், ஏஞ்சல்ஸ், நாராயணன், உள்ளிட்ட, வீராங்கனைகள், பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பலர் கலந்து கொண்டனர்.