State level tennis tournament in Perambalur
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள ஒரு கோல்டன் கேட்ஸ் பள்ளயில் மாநில அளவிலான டென்னிஸ் விளையாட்டுப் போட்டி கடந்த 6 ந்தேதி தொடங்கி 7, 8 ஆகிய மூன்று நாட்களாக நடைபெற்றது.
10 வயது, 12 வயது, 14 வயது, 16 வயது என நான்கு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இறுதிப்போட்டியில் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முசிறியை சேர்ந்த பாலாதருனேஷ் என்பவரும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முசிறியை சேர்ந்த ஓவியா என்பவரும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முசிறியை சேர்ந்த நவீன் என்பவரும், 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் (மாணவர்) முசிறியை சேர்ந்த நவீன் என்பவரும், (மாணவியர்)பிரிவில் முசிறியை சேர்ந்த ஓவியா என்பவரும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.