Steps to bring daily Cauvery Drinking Water and Medical College to Perambalur soon: A.Raja speak at the candidates congratulatory function!

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு கூட்டம், மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலையில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா. எம்.பி., பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு, பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, ,லெப்பைக்குடிக்காடு ஆகிய 4- பேரூராட்சிகளிலும் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கு பாராட்டி சிறப்புரையாற்றினார்கள்.

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா. எம்.பி.பேசியாதாவது:

நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலின் வெற்றியானது கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலும் தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபிக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தேசிய தலைவராக உயர்த்தியுள்ளது எனவும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை விரைவில் கொண்டு வரப்படும், பெரமபலூர் மக்களுக்கு தினந்தோறும் காவிரி குடிநீர் வழங்கப்படும், இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களையும், தொண்டர்களையும் மதிக்க வேண்டும், தோல்வியடைந்தவர்களை கட்சி கை விடாது என்றும் பேசினார்.

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:

வெற்றி பெற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் எனவும், எந்த நேரத்திலும் மக்களின் குறைகளை எங்களிடம் தெரியப்படுத்துங்கள் என்றும் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் நகராட்சிக்கு அம்பிகா ராஜேந்திரன் தலைவராகவும், துணை தலைவராக து.ஹரிபாஸ்கர், அரும்பாவூர் பேரூராட்சி தலைவராக வள்ளியம்மை ரவிச்சந்திரன், துணை தலைவர் சரண்யா, குரும்பலூர் பேரூராட்சி தலைவரா சங்கீதா ரமேஷ், துணை தலைவராக கீதாராஜேந்திரன், பூலாம்பாடி பேரூராட்சி தலைவராக பாக்கியலட்சுமி செங்குட்டுவன், துணை தலைவராக செல்வலட்சுமிசேகர், லெப்பைகுடிக்காடு பேரூராட்சிக்கு தலைவராக ஏ.எம்.ஜாஹிர்உசேன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தார்.

இந்த கூட்டத்தில், கழக சட்டத்திருத்த குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க.கண்ணன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.ந.அ.பெருநற்கிள்ளி, முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ந.ஜெகதீஸ்வரன்,மாவட்ட துணை செயலாளர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில், தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ.இரவிசசந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், பேரூர் கழகசெயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன்,பி.சேகர், ஏ.எஸ்.ஜாஹிர்உசேன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அப்துல் பாரூக், துணை அமைப்பாளர் பழக்கடை ஒஜீர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், இந்திய தொழிலாளர் கட்சிதலைவர் ஈஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ரத்தினவேல் உள்ளிட்ட கழக பிரமுகர்கள் மற்றும் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!