Steps to solve all basic problems: NTK candidate Thenmozhi interview!
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வெற்றி பெற்ற பிறகு பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்திற்கும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் தேன்மொழி தெரிவித்தார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகத்திடம் தாக்கல் செய்தார். பின்னர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேன்மொழி, பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், வெற்றி பெற்ற பிறகு பொது மக்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும், தேவைகளும் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதோடு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.