Stop religious preaching’ hoardings come up in Tirunelveli village
திருநெல்வேலி மாவட்டம், பூலாங்குளம் என்ற கிராமத்தில், மதப்பிரச்சாரம் செய்வோர்களால் பாதிப்படைந்த பொதுமக்கள் மதப்பிரச்சாரம் செய்ய தடை விதித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
பெரும்பாலான கிராமங்களில் உள்ள அப்பாவி மற்றும் ஏழை மக்களின் வறுமை மற்றும் அறியாமையை பயன்படுத்தி பலர், நோய் குணமாகும், வறுமை நீங்கும் என பல அறிவியலுக்கும், உண்மைக்கும் புறம்பாக பல வாக்குறுதிகளை அள்ளி மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர்.
இது மத மாற்றங்கள் காலநேரம் இல்லாமல் செய்யப்படுகிறது. எ-கா: விடியற்காலை மற்றும் அதிகாலை நேரங்களில ஒலிபெருக்கியை கையில் வைத்து கொண்டு பிரச்சாரம் செய்வது, ஆசை காட்டுவது போன்ற பல இம்சைகளை அனுபவித்த அக்கிராம மக்கள் ஒன்று திரண்டு, மதப்பிரச்சாரம் செய்ய தடை விதித்ததுடன் அறிவிப்பு பலகை வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.