Stormy Rain Echoes; Damage to maize harvest in Perambalur!
பெரம்பலூர் மாவட்டத்தில் பல இடங்களில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை சுமார் 11 மணி அளவில் பலத்த மழை பெய்தது. மானாவாரி சாகுபடியில் மக்காச்சோளம் பயிர் செய்திருந்த விவசாயிகள் தற்போது அறுவடையில் ஈடுபட்டுள்ளனர். மார்கழி மாதம் புயலால் தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விளைந்த விளைச்சலை, பாதுகாக்க உள்ளிட்ட பல்வேறு முறைகளில் செய்து பாதுகாத்து வருகின்றனர். காற்றின் ஈரப்பதம் அதிக அளவில் உள்ளதால் மக்காச்சோளத்தை காய வைப்பதற்கு கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்