Strike and demonstration on behalf of BSNL Employees Union in Namakkal
நாமக்கல்லில் பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் எம்ளாயீஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிளார் சங்கம் சார்பில் நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ராஜகோபால் தலைமை வகித்தார். பாலசுப்பிரமணியன் வரவேற்றார். இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளிக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை நிறுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர் முறையை ரத்து செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ரயில்வே, இன்சூரன்ஸ், பாதுகாப்பு துறைகளில் பன்னாட்டு மூலதனத்தை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செல்வராஜ் மற்றும் கோபால் ஆகியோர் பங்கேற்று பேசினர். ரவிமணி நன்றி கூறினார்.