Strong winds blew in Namakkal district: Rs 50 lakh worth of damage to the banana trees
பரமத்தி வேலூர் பகுதியில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா பொத்தனூர் காவிரி ஆற்றுக்குச் செல்லும் வழியில் ஏராளமான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு பொத்தனூர் பகுதியில் சூறை காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதில் பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த கணேசன், குமார், ரவி, ஜெகநாதன், குப்புசாமி, ராஜா, சின்னத்தம்பி, செல்வம் ஆகிய விவசாயிகளின் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த உள்ளிட்டோர் வாழை பயிர் செய்திருந்த சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து நாசமானது.
இதன் சேத மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது.
சூறாவளிக்காற்றால் வாழை மற்றும் வெற்றிலை கொடிக்கால் சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.