Strong winds in the district: Banana trees were felled, farmers doom
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வீசிய பலத்த சூறைக்காற்றில் பல லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் குலையுடன் முறிந்து சேதம். வேதனையிலுள்ள வாழை விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கோடை மழை பெய்து வருகின்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை பகுதியில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த சூறைக்காற்று வீசியது லேசான தூரலுடன் மழை நின்ற போதிலும்.இந்த சூறைக்காற்றில் வேப்பந்தட்டை அருகிலுள்ள விசுவ குடி கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் முறிந்து விழுந்தன.
இதில் விசுவ குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கோபால், அந்தோனி, பிச்சை ஆகியோரது வாழைத்தோட்டத்தில் மட்டும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் பூ, பிஞ்சுதாங்கிய குலையுடன் முறிந்து விழுந்தன.
இதேபோல் வாலிகண்டபுரம் கிராமத்தில் கருப்பையா என்பவருக்கு செந்தமான 2 ஏக்கர் பரப்பிலான வாழை மரங்களும் முறிந்து விழுந்து பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவசாயிகள் அனைவரும் செவ் வாழை, கற்பூரவள்ளி மற்றும் மோரிஷ் என உயர் வகை வாழை மரங்களை பயிரிட்டிருந்ததால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று வேதனை தெரிவித்தனர்.
– இதனிடையே வேப்பந்தட்டை பகுதி தோட்டக்கலை துறை அலுவலர்கள் இச்சம்பவம் குறித்து நேரில் பார்வையிட்டு காற்றில் சேதமுற்ற மரங்களை கணக்கிட்டு வருகின்றனர்.. சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசு தங்களுக்குஉரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பயிர் காப்பீட்டு திட்டத்தை பாதிக்கப்படும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் முறைபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.