Struggle of hunger strike to set up a Taluck HQ hospital in the Karai
பெரம்பலூர் அருகே வட்டார மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், வட்டார தலைமை அரசு மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாரவிரதபோராட்டம் நேற்று நடந்தது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை மருத்துவமனையை தரம் உயர்த்தி அதே இடத்தில் தொடர்ந்து வட்டார மருத்துவமனை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடாலூருக்கு வட்டார மருத்துவமனையை மாற்றக்கூடாது என வலியுறுத்தி அதிமுக சார்பில் நேற்று காரை பஸ் நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு அதிமுக பொறுப்பாளர்கள் ராமசாமி, கலையரசன் ஆகியோர் தலைமை வகித்தனர். அதிமுக நிர்வாகிகள் தங்கவேல், தேவராஜ், ராஜாங்கம், குமார், நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமராஜ் சிறப்புரையாற்றினார்.
தகவலறிந்த சுகாதாரத் துறையினர் அங்கு சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வட்டார மருத்துவமனை இடம் மாற்றம் செய்யாமல் காரையிலேயே இயங்கும், இன்னும் 2 மாதத்தில் கூடுதல் டாக்டர்கள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டு வட்டார மருத்துவமனை இயங்கும் என உறுதி கூறினர். இதையடுத்து உண்ணாரவிரதப்
போராட்டத்தை மக்கள் கைவிட்டு கலைந்துசென்றனர்.
முன்னதாக அதிமுக பொறுப்பாளர் கலைவாணன் வரவேற்றார். முடிவில் அதிமுக பொறுப்பாளர் சிவலிங்கம் நன்றி கூறினார்.