Students at the school tried to shut the entrance to the private company, the public to protest against roadblock, Near by Perambalur
பெரம்பலூர் அருகே மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நுழைவு வாயிலை அடைக்க முயற்சித்த தனியார் நிறுவனத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் உள்ள ஓலைபாடி கிராமத்தில் பேருந்து நிலையம் அருகில் அரசு நடுநிலை பள்ளி கட்டிட வளாகத்தில் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் கடந்த 6 மாத காலமாக இயங்கி வருகிறது,
இந்நிலையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் தற்போது பாதுகாப்பு கருதி சுற்று சுவர் அமைக்க திட்டமிட்டது. அதன்படி நேற்று சுற்று சுவர் அமைக்க முதற்கட்ட நடவடிக்கையாக நீள அகலத்தை அளந்து சரி பார்த்தனர்.
பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தனியார் ஏற்றுமதி ஆடை நிறுவனம் சுற்று சுவர் கட்டுவதால் தங்களது குழந்தைகள் பள்ளி செல்லும் பாதை துண்டிக்கப்படும் என்பதை அறிந்தனர். அங்கு ஒன்று திரண்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
இதை அறிந்த குன்னம் இன்ஸ்பெக்டர் அலாவூதின், குன்னம் தாசில்தார் ஷாஜஹான், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதிதாசன், ஆகியோர் விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர பள்ளியின் பின்புறம் தனியாக மாற்று பாதை அமைத்து தருவதாக தெரிவித்தனர். இதை ஏற்காத பெற்றோர்கள் வழக்கமான பாதையில் தான் குழந்தைகள் செல்லவேண்டும் பள்ளிக்கு பின்னால் பாதை வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை முடிவில் தற்சமயம் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வழக்கமான பாதையை பயன்படுத்து என்றும் , பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சி தலைவரிடம் தெரிவித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
இச்சம்பவத்திற்கு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.