Check caste and subdivision at employment office: Perambalur Collector!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (MBC) ஏற்கனவே வழங்கப்பட்ட இருபது சதவீத இட ஒதுக்கீட்டிற்குள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (வன்னியகுல ஷத்ரியர்)- 10.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் சீர்மரபினர் – 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 2.5 சதவீதம். சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கி ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள மேற்காணும் வகுப்பு பதிவுதாரர்கள் தங்களுடைய சாதி மற்றும் உட்பிரிவு சரியாக உள்ளதா என www.tnvelaivaaipu.gov.in என்ற இணையதள மென் பொருளிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ 15.09.2021-க்குள் சரிபார்த்துக் கொள்ளுமாறும், திருத்தங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டும், என அதில் தெரிவித்துள்ளார்.