Students who left the exam and waited for the prize in the collector’s office!
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. ஆனால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அறிவிக்கப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் சுமார் எட்டுக்கும் மேற்பட்டோர் இன்று காலை சுமார் 9 மணி முதல் கலெக்டர் கையில் பரிசு பெறுவதற்காக காத்திருந்தனர். அவர்களுடன் ஆசிரியர்களும் சில பெண் மாணவிகளுக்கு துணையாக பெற்றோர்களும் வந்திருந்தனர். பரிசு பெற வந்த மாணவர்கள் சுமார் 11 மணி ஆகியும் பரிசு வழங்கி உடனே அனுப்பி வைக்கப்படாத நிலையில், மக்களோடு மக்களாக இன்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெஞ்சில் வரிசையாக அமர்ந்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பரிசு வழங்குவதாக இருந்தால், மாணவர்களின் நலன் கருதியும் தேர்வு எவ்வளவு முக்கியம் என்பதை கருதியும் பரிசு வழங்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு பரீட்சை நேரத்தில் மாணவர்களை காத்திருக்க வைப்பது அவர்களை மனரீதியாக பாதிக்கப்படும் என்பதால் கல்வித் துறை அதிகாரிகள் அதை உரிய நேரத்திற்கு ஏற்பாடு செய்து, வரும் நாட்களில் இது போன்ற நிகழ்வு நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.