Sub-examinations for Class X and XI: CEO Information
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வுகள் 15.09.2021 முதல் 30.09.2021 வரை 4 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வுகள் 15.09.2021 முதல் 30.09.2021 வரை பெரம்பலூர் கல்வி மாவட்டத்திற்கு தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் கல்வி மாவட்டத்திற்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி குன்னத்திலும் நடைபெற உள்ளது.
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் 16.09.2021 முதல் 28.09.2021 வரை பெரம்பலூர் கல்வி மாவட்டத்திற்கு ஸ்ரீராமகிருஷ்ணா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பூர் கல்வி மாவட்டத்திற்கு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பாடாலூரிலும் நடைபெற உள்ளது என முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் தெரிவித்துள்ளார்.