subsidized terraced garden suites; Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் – 2023-24 ஆம் நிதியாண்டில் மாடித்தோட்டத் தளைகள் விநியோகம் இனத்தின் கீழ் 200 மாடித்தோட்டத் தொகுப்புகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

செடி வளர்ப்புப் பைகள், தென்னை நார் கழிவுக் கட்டிகள், ஆறு வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, வேப்பபெண்ணெய் மற்றும் காய்கறி வளர்ப்பு கையேடு ஆகியவை அடங்கிய தொகுப்பு 50% மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளன. தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ.900/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகளை மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தினை திறன்பட செயல்படுத்திட பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 24.07.2023 அன்று மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட உள்ளன. ஆர்வம் உள்ள பயனாளிகள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

விரும்பும் பயனாளிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகியோ அல்லது http://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration என்ற இணையதளத்தில் பதிவு செய்தோ பயன் பெறலாம் என பெரம்பலூர் கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!