Subsidy for setting up herbal garden in homes : Notification of Perambalur Horticulture Department

பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் சட்டமன்ற அறிவிப்பை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத் துறைக்கு 2022-23ம் ஆண்டிற்கான மாநில நோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீடுகளில் மூலிகை தோட்டங்கள் அமைக்க பொருள் மற்றும் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.

அதன்படி 10 வகையான மூலிகைச் செடிகள், (துளசி, கற்பூரவல்லி, திருநீற்றுப்பச்சிலை, ஆடாதொடை, வல்லாரை. திப்பலி, அஸ்வகந்தா, பிரண்டை, கற்றாழை, கிழாநெல்லி} செடி வளர்ப்பு பைகள், தேங்காய் நார் கட்டிகள், மண்புழு உரம் மற்றும் தொழில்நுட்ப கையேடு ஆகிய இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ.1500/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக ஒரு தொகுப்பு பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவர், பயனாளியின் பங்கு தொகையாக தொகுப்பு ஒன்றிற்கு ரூ.750/- செலுத்த வேண்டும். பயனாளிகள் மூலிகை தோட்ட செடிகளை பெற ஏதாவது ஒரு அடையாள ஆவணம் மற்றும் பயனாளியின் புகைப்படத்தை http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இந்த திட்டங்களை பற்றி மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு, தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!