Successive Deaths of Couples Near Perambalur: Causes of Infection? Health department, police investigate!

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி, ஜமாலியா நகரை சேர்ந்தவர் மொய்தீன்புஹாரிபாபு(60), நீரழிவு மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு இன்று திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் (காய்ச்சல்) லெப்பைக்குடிக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த மொய்தீன் புஹாரிபாபுவின் மனைவி ரஹமத்பீவீ(50),க்கும் திடீரென இன்று ஏற்பட்ட உடல்நலக் குறைவால் (காய்ச்சல்) பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாய், தந்தையர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இவர்களது மகன் அப்துல்காதருக்கு(23), மூச்சு திணறல் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நலக்குறைவால் வயதான தம்பதியினர் அடுத்தடுத்து ஒரு மணிநேர இடைவெளியில் உயிரிழந்ததற்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமா? இருக்குமோ என லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறையினர் மற்றும் மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த தம்பதியினர் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் இருவரது சடலமும் உடற்கூறு ஆய்வுக்காக பின்னர் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

உடல் நலக்குறைவால் உயிரிழந்த மொய்தீன்புஹாரிபாபுவின் தந்தை ஜமாலியா என்கிற அப்துல்காதர் காமராஜர் ஆட்சி காலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் எம்எல்ஏ.,வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!