Suffered Corona, Cured 20 Patient, sent via greeted MLA R Tamilselvan

பெரம்பலூர் மாவட்டத்தில் டெல்லி சென்று திரும்பியவர், 4 வயது சிறுவர், சிறுமியர், ஒரு தலைமைக் காவலர், ஒரு தீயணைப்பு வீரர், இரண்டு கல்லூரி மாணவர்கள், ஒரு கல்லூரி மாணவி மற்றும் 25க்கும் மேற்ப்பட்ட கர்ப்பிணி பெண்கள், 108 ஊழியர்கள் சென்னை கோயம்பேடு தொடர்பு 89 பேர் என கொரோனா வைரஸ் தொற்றால் 132 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 62 பேரும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 70 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் ஏற்கனவே 4 வயது சிறுவர், சிறுமி, ஒரு தீயணைப்பு வீரர், தலைமைக்காவலர் ஒருவர், ஒரு கல்லூரி மாணவர் உட்பட 7 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 பேரில் ஒரு கர்ப்பிணிப் பெண், ஒரு கல்லூரி மாணவி உட்பட 20 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

இவர்களை, பெரம்பலூர் எம்.எல்ஏ.,தமிழ்ச்செல்வன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி பழ கூடைகளை பரிசாக வழங்கியதுடன், கர ஒலி எழுப்பி வாழ்த்தி அவர்களது வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தனர்.


படவிளக்கம்: கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை எம்.எல்.ஏ இளம்பை. இரா.தமிழ்ச்செல்வன் சுகாதாரத்துறையினர் சார்பில் பழக்கூடைகளை கொடுத்து வாழ்த்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்த போது எடுத்தப்படம். அருகில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!