Sugarcane field burned near Perambalur by a spark in the wires.
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்த அழகம்மாள் (70) மற்றும் வெள்ளையன் (60) ஆகிய இருவருக்கும் சொந்த நிலம் உள்ளது. இதில் கரும்பு பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் இன்று சுமார் 3 மணியளவில் சற்று பலமான காற்று வீசியது. இதில் கரும்பு வயல் மேல் மின்கம்பிகள் செல்கிறது. இதில் காற்று பலமாக வீசியதில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்வு ஏற்பட்டதில் தீப்பொறிகள் உருவாகி கரும்பு தோகைகள் மீது விழுந்ததில், கரும்புகள் தீபிடித்து எரியத் தொடங்கின.
இதைக்கண்ட அக்கம்பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் சுமார் அரை ஏக்கர் நிலத்தில் வெட்டுவதற்கு தயாராக இருந்த கரும்புகள் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு சுமார் 50 ஆயிரம் ருபாய். இந்த வயலை சுற்றி சுமார் 30 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது. விவசாயிகள் விரைந்து சென்று தீயை அணைத்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.