public-stroke-bus பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சீதா ( வயது 20). இவர் பெரம்பலூர் தண்ணீர் பந்தலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த வாரம் கல்லூரியில் பருவத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களில் முழுமையாக கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு மட்டும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதாகவும், சீதா கட்டணம் செலுத்தாததால் ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை எனவும், ஏன் பணம் கட்டாமல் இருக்கிறாய் என ஆசிரியர் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சீதா பருத்தி செடிக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு வாயில் நுரைத்தள்ளியவாறு வீட்டில் கிடந்துள்ளார். உடனடியாக சீதாவை அவரது குடும்பத்தினர்கள் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு சேர்துள்ளனர்.

இந்நிலையில் சீத்தாவின் உறவினர்கள் இன்று காலை பசும்பலூருக்கு மாணவர்களை ஏற்றுவதற்காக வந்த கல்லூரி பேருந்தை வழிமறித்து மாணவியை திட்டிய கல்லூரி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்லூரி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக வி.களத்தூர் காவல் நிலையத்தினர் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுதா என உறுதியளித்தனர்.

பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு விலகி சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!