Summer Neer Mor Pandal at Perambalur: DMK Deputy General Secretary A. Raja inaugurated!
பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. கொளுத்தும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் பயன் பெறும் வகையில், மாவட்டத்தின் முதல் கோடை கால இலவச தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி, பாலக்கரையில், பெரம்பலூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூடு (எ) பொன்.கோவிந்தராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.,
நிகழ்ச்சியில், தி.மு.க. துணைப் பொதுச்செயலளர் ஆ.இராசா.எம்.பி., கலந்து கொண்டு இலவச தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தண்ணீர்,மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச்செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் செ.வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் என்.ஜெகதீஷ்வரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.ராஜ்குமார், வீ.ஜெகதீசன், நகராட்சி துணை தலைவர் து.ஹரிபாஸ்கர், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல்பாரூக், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், பொறியாளர் கண்ணன்,தொ.மு.ச. கவுண்சில் மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, நகராட்சி உறுப்பினர்கள் சேகர், வழக்கறிஞர் ரகு, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பழக்கடை ஒஜீர், கவுண்சிலர் கலையரசன், சங்கர்,சுரேஷ், அத்வானி,இ.பி.கோவிந்தன், சபியுல்லா,, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.