Summer rains in Perambalur district People are happy !!
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், செஞ்சேரி, எசனை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதால் பூமி குளிர்ச்சி அடைந்துள்ளது. வியர்வையில் அவதிப்பட்ட மக்களுக்கு தட்ப வெப்ப நிலை மாறி உள்ளதால் காற்றை கோடை காலத்திலும், கரோனாவிலும் அவதிப்பட்ட குளுமையான காற்றை இதமாக மக்கள் அனுபவித்து வருகின்றனர். விவசாயிகளும் தாங்கள் பயிரிட்ட கோடைப் பயிர்களுக்கு நீர் இரைப்பதை நிறுத்தி உள்ளதால் கிணற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், வறண்டு காய்ந்து போன நிலத்தில் ஆடு மாடுகளுக்கு புதிய புற்கள் முளைக்க தொடங்கினால் நல்ல தீவனம் கிடைக்கும் என்பதால் கால்நடை வைத்திருப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பசுந்தீவனம் அதிகரிப்பதால் பாலின் உற்பத்தியும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.