Summer water Bunk on behalf of AIADMK: RT Ramachandran MLA inaugurated in the presence of the Union Secretary N.K. Karnan
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றிய கிழக்கு அதிமுக சார்பில், கொளக்காநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே கோடைக்கால தண்ணீர் பந்தலை ஒன்றிய செயலாளர் என்.கே கர்ணன் முன்னிலையில், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர், நீர், மோர், தர்ப்பூசணி, வெள்ளரி, இளநீர், பொங்கல், மற்றும் புளியோதரை பொதுமக்களுக்கு வழங்கினார். மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் என்.ராஜ்குமார், ஆலத்தூர் ஒன்றியப் பேரவை இணைச் செயலாளர் டி.செல்வராஜ், ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குரும்பாபாளையம் சி.நாகராஜன், குரும்பலூர் பேரூர் செல்வராஸ், ஊராட்சித் தலைவர்கள் ஜெமீன்ஆத்தூர் ஜி.சண்முகம், கீழமாத்தூர் கே.பி.ராஜேந்திரன், முன்னாள் சேர்மன் வெண்ணிலா ராஜா, தெரணி கலியமூர்த்தி, மற்றும் கொளக்காநத்தம், அயினாபுரம், அணைப்பாடி, காரை, தெரணி, வரகுபாடி, நாரணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.