Support the decision to merge the surrounding villages with Perambalur Municipality and convert them into a corporation: the dream of a poor man’s house with Mirage!

பெரம்பலூர் நகராட்சியின் கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. காலமான 17வது வார்டு, திமுக கவுன்சிலர் துரை.காமராஜுவிற்கு மவுன அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், பெரம்பலூர் நகராட்சியை சுற்றி உள்ள கிராமங்கலான நொச்சியம் கிராமத்தின் ஒரு பகுதியையும், கோனேரிப்பாளையத்தின் ஒரு பகுதியையும், எளம்பலூர் மற்றும் கவுல்பாளையம் ஆகிய கிராமங்களையும் இணைத்து பெரம்பலூர் நகராட்சியை மாநாராட்சியாக விரிவாக்கம் செய்வதற்கு ஆதரவு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், நிலங்களின் மதிப்புகள் உயருவதால், ஏழைகள் பெரம்பலூரில் வாழ சிரமப்படுவார்கள். ஏற்கனவே, பெட்ரோல், டீசல் தங்கம் நிலத்தின் அடியில் உள்ளது போல பெரம்பலூரில் தரிசு மற்றும் கருமண்ணின் விலை ஒரு ஏக்கர் ஒரு கோடிக்கு மேலும், முக்கிய இடங்களில் 40 கோடி ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

வருமானம் குறைந்த நிலையில் சுயதொழில் செய்பவர்கள், தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களின் குடும்பங்கள் பெரும் சிரமத்தை சந்திக்கும், நகராட்சியின் வரி உயர்வால், வீட்டு வாடகை, கடை வாடகை கடுமையாக உயர்ந்துள்ளதால் மற்ற ஊர்களை விட பெரம்பலூரில் பொருட்கள் விலை அதிகமாக இருப்பதால், பெரும்பாலான ஏழை மக்கள், அரியலூர், துறையூர் (திருச்சி), ஆத்தூர் (சேலம்), திட்டக்குடி (கடலூர்) மாவட்டங்களுக்கு பொருட்களை வாங்க சென்று வருகின்றனர்.

ஒன்றை வீதி மட்டுமே முக்கிய வீதியாக உள்ளது. மற்ற வசிப்பிடங்களில். அதிக அளவு கமிசன் வாங்கும் அதிகாரிகள், ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள், கருப்பு பணம் கொண்ட வணிகர்களே வசிக்கும் நகராமாக மாறினால், ஏழைகள் பாடு திண்டாட்டம் தான். தனி மனிதனின் வீடு என்ற கனவு என்பது கானல் நீராக மாறும். மேலும், கல்வி மற்றும் மருத்துவத்திற்கு வருமானத்தில் ஒரு தொகை ஒதுக்கி சிரமப்படும் மக்களுக்கு இது ஒரு பாரமாக அமையாமல், பூவிலே வண்டு தேன் எடுப்பது போன்று வரிகள் இருந்ததால் மாநகராட்சி திட்டம் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இல்லை எனில் கருப்பு பணம் ஜாம்பவானிகளின் கூடரமாக எம்.ஆர்.ராதா கதை போல் பெரம்பலூர் மாறிவிடும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!