Suspend the police who made the student pregnant: Perambalur SP order!
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூரை சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவர், பெரம்ப லூர் மாவட்ட ஆயுதப் படையில் போலீசாக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகளுடன் பெரம்பலூரில் வசித்து வந்தார்.
சிறுவாச்சூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் தகாத உறவாக மாறியது. மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார். தற்போது 8 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.இதை அறிந்த மாணவியின் பெற்றோர் ஆத்தூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
பிரபாகரன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் போலீ சார், சிறுவாச்சூர் வந்திருந்த பிரபாகரனை விசாரணைக்கு ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
போலீசார் விசாரித்து கொண்டிருந்த போது, திடீரென அங்கிருந்து, நண்பர் உதவியுடன், பைக்கில் தப்பினார். இந்த காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் பிரபாகரனை தேடிய போது, கள்ளக்குறிச்சியில் உள்ள நண்பர் வீட்டில் பிரபாகரன் பதுங்கி இருப்பதாக அறிந்து கைது நேற்றிரவு கைது செய்தனர்.
அவர் நாளை கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. போலீஸ்காரர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து பெரம்பலூர் எஸ்பி ஷ்யமளா தேவி உத்தரவிட்டார்.