Swine flu vaccination drive going on throughout this month: Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2024-2025-ஆம் ஆண்டு மத்திய அரசு திட்டத்தின்கீழ் கால்நடை நலன் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டம் மூலம் (LHDCP) பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பூசிப்பணி தகுதிவாய்ந்த பன்றிகளுக்கு 24.04.2024 முதல் 30 நாட்களுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு 700 டோஸ் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நோய் பெஸ்டி வைரஸ் கிருமியால் ஏற்படும் தொற்று நோயாகும் அதிக காய்ச்சல், தோல் புண்கள், வலிப்பு, மண்ணீரல் பாதிப்பு, பசியின்மை, மந்தத்தன்மை, பலவீனம், விழிவெண்படல அழற்சி, வயிற்று போக்கு மற்றும் மலச்சிக்கல், தடுமாற்றமான நடை, இனப்பெருக்க செயல்திறன் குறைபாடு போன்றவை இந்நோயின் அறிகுறியாகும், நோயுள்ள இடங்களில் பன்றிகள் வாங்குவதன் மூலம் இந்நோய் பரவுகிறது.

ஆகவே, பன்றிக்காய்ச்சல் நோயிலிருந்து பன்றிகளை பாதுகாத்திட மூன்று மாத வயதிற்கு மேற்பட்ட சினையில்லாத (கருவுறாத) ஆரோக்கியமான பன்றிகளுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பூசி (CSF) தடுப்பூசி அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் செலுத்தப்படவுள்ளது. பன்றி வளர்ப்போர் பன்றிகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!